அன்னையும் தோழியே

விட்டத்தை வெறித்தேன் துயரத்தோடு !
மனமோ புது நட்புக்கான
முகவரியின் தேடலோடு !
எனக்கேன் இந்த சாபம்
என்று எண்ணினேன் வேதனையோடு!
அப்போது,"என்னடா ஆச்சு சோகமா இருக்க?"
என்று என் அன்னை வந்தாள் கேள்வியோடு !
அப்போது நண்பனுக்கு துயரத்தில்
தோள் கொடுப்பது மட்டும் நட்பன்று
துயரம் ஏற்படாமல் காப்பதும்
நட்பே என்று நினைவு வந்தது வேகத்தோடு!
புது நட்பு கிடைத்த உணர்வில்
என் சோக கதையை சொன்னேன் மகிழ்ச்சியோடு!

எழுதியவர் : swasthika (16-Sep-14, 7:57 pm)
Tanglish : annaiyum thozhiye
பார்வை : 226

மேலே