விவசாயி

விழி பிதுங்கும் வேளையிலும்
விடியலைத் தேடாதவன்

கையும் காலும் மிச்சமாய் போனவன்
கானல் நீராய் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன்

மரங்களெல்லாம் தலை சாய்த்த பின்னர்
மழைக்காக ஏங்கி நிற்பவன்
மழைக்காக ஜெபிப்பவன்
மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்துபவன்
பாவம் இவன் இவன் வாழ்வு பரிதாபத்துக்கு உரியது

விண்ணை முட்டும் விலைவாசி
பாசத்தை பாலைவனமாக்கிய போதும்
அதன் காரணம் அறியாதவன்
பாவம் பரிதாபத்திற்குரியவன் மட்டுமல்ல பத்தயக்குதிரையும் ஆவான்
இவன் மீது ஏறி சவாரி செய்தவர்கள்
பண முதலைகளாய் பவனி வருகிறார்கள்

ஒவ்வொரு தேர்தல் களத்திலும்
இவன் முன்னிருத்தப்படுவான்
மீண்டும் மீண்டும் ஏமாற்றப் படுவான்
பாவம் இவன் பரிதாபத்திற்குரியது இவன் வாழ்வு

இவன் கழுத்தை அறுத்தவன் யார்
இவனது கால்களை முடமாக்கியவன் யார்
இவனது தற்கொலைக்கான தூண்டல் யார் துலங்கள் யார்
புரிதல் ஒன்றே புரிதலுக்கான விடை

இவனுக்காக குரல் கொடுக்க எவருமில்லை
என்ற நிலை மாற்றுங்கள்

கனல் கக்கும் எரிமலையை
இவன் மனங்களிலே மூட்டுங்கள்

எழுதியவர் : பொற்செழியன் (16-Sep-14, 8:17 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 73

மேலே