கார் நாற்பது 4 - தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தது - இன்னிசை வெண்பா

கார் நாற்பது
இன்னிசை வெண்பா

ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப்1 பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து! 4

பொருளுரை:

கூத்தாடும் மகளிர்போல மயில்கள் அழகுபெற காடுகளும் கொன்றைகள் அழகுபெற மலர்ந்தன; பாடுகின்ற வண்டுகளும் அப் பூக்களை ஊதாநிற்கும்; ஆதலால், மூங்கில் போலும் தோளை யுடையாய்! இப் பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும்,

மஞ்ஞை கார்காலத்திற் களிப்புமிக்கு ஆடுதலின் ஆடுமகளிரை உவமை கூறினார்; 1.கவின்கொள என்றும் பாடம்!.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (15-Aug-25, 7:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

சிறந்த கட்டுரைகள்

மேலே