சிதறல்

யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும் தப்பாமல்
நடனமாடுகிறது குளம்
தடுமாறி நிற்கிறேன் நான்!

***

நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன் சூடான
உன் நினைவுகளோடு....!

***

ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

***

பேருந்துப் பயணம்
ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை
பார்வையாளனாய் நான்....!

***

ஒரு சிட்டுக் குருவி
ஈரச் சிறகு
படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!

***

காற்றில் பறக்கும்
சருகுகள்
கலைந்து திரியும்
மனிதர்கள்
நிற்கப் போகும் காற்று!

***

கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!

எழுதியவர் : Dheva . S (20-Sep-14, 10:09 pm)
Tanglish : sitharal
பார்வை : 231

மேலே