காத்திருக்கிறேன் கண்ணே
“ இதழ்களின் நடுவிருக்கும்...
“ இடைவெளியைப் பயன்படுத்தி....
“ உன்னுள் புகுந்துவிடத்தான் ஆசை...
“ எனது மூச்சுக்காற்றுடன் போட்டியிடும்...
“ தென்றல் காற்றை என்ன செய்வது?
“ காற்று கூடவா என் காதலுக்கு எதிரி?
“ ஆனாலும் காத்திருக்கிறேன் அன்பே...
“ இதழ்களின் வழியாக அல்ல...
“ உனது இதயத்தின் வழியாகவே...
“ எனை அழைப்பாய் என....
“ காத்திருக்கிறேன் கண்ணே!