சிலுவையும்,புத்தகமும்

சிலுவையயை சுமந்தபடி இறைவன் ;
பாடபுத்தகங்களை சுமந்தபடி குழந்தைகள் ;

சிலுவையில் அறையப்பட்ட கரங்களாய்
மாறிவிட்டன,
பக்கங்களுக்குள் சிறைப்பட்ட பார்வைகள்..!

இறைவனுக்கு முள்கிரிடம்;
குழந்தைகளுக்கு கண்ணாடிகள்..

காலவரையின்றி நிகழ்கிறது
மனனமும் ;ஜெபமும் ;

மேய்ப்பவனுக்கு மன்னிப்பு வழங்குவதும்,
மேய்க்கபடுபவனுக்கு கனவுகள் காண்பதும்
முக்கிய பணிகள்..

இறைவனின் மறுபிறப்பு விடுமுறையானது,
ஒவ்வொரு விடுமுறையும்
குழந்தைகளின் மறுப்பிறப்பானது..

காலங்கள் மாறி
நூற்றாண்டுகள் கடந்த போதும்
பயத்தின் காரணமாகவே
கை(கொள்ள) யாள படுகிறது
சிலுவையும் ,
புத்தகமும்
நம் கைகளில்..!!.

எழுதியவர் : கல்கிஷ் (24-Sep-14, 7:26 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 159

மேலே