உதாரணம்
உதாரணம் என்ற சொல்லை
உதாரணம் என்பதற்கு மாறாக
வேறோன்றினை குறிக்கும்படி
உதாரண படுத்திவிடமுடியாது..
இவ்வாறு
உதாரணமற்ற உதாரணம் என்ற
ஒரு
சொல்லினை போல்
வேறு சிலவும்
உதாரண படுத்தலாம்..
வலி என்ற உணர்விற்கு
உதாரணம் அளித்துவிட முடியாதது -ஒரு உதாரணம்,
பசி என்ற பகைவனுக்கு
உதாரணம் அளித்துவிட முடியாதது -மற்றொரு உதாரணம்.
மேலும்
உதாரண படுத்தி காட்டகூடிய
சில சொற்களை
உதாரணமாக பார்க்கலாம்..
ஞானத்தின் எழுச்சியினை விடியலாகவும்,
என்னவள் மேனியினை இயற்கையாகவும்,
உதாரண படுத்திவிடலாம்..
யாரேனும் கவிதை கேட்டால்,
இதை உதாரணமாக கூறி
நீங்கள் ஒரு நல்ல ரசிகன்
என்பதற்கு
உதாரணமாகலாம்..
உதாரணத்திற்கு,
நானும் ஒரு கவிஞன் என்றே
கூறி கொள்வேன்..
உதாரணம் கேட்டால்,
ஒரு சிறந்த உதாரணமாக்குவேன்
இக்கவிதையினை,
உங்களைபோல்..!!
பின்குறிப்பு : விளையாட்டு போக்கில் ,ஒரு வார்த்தையினை விதவிதமாக பயன்படுத்தி எழுதும்போது பிறந்த கவிதை(!) இது.

