கையூட்டுக் கலைஞர்கள்
லஞ்சம் வாங்குவதை
சட்டப்பூர்வமாக்கினால்
லஞ்சம்பெறும் மகான்களின்
நலன்காக்க தேவையொரு சங்கம்
கையூட்டுக் கலைஞர் மன்றம்
அதன்பெயராய் இருக்கலாம்.
விடுமுறையே கூடாதென்று
போராட்டம் நடக்கலாம்
அடிக்கடி கையூட்டுத்தொகையை
ஏற்றிப்பெறும் உரிமைக்கு
வேலைநிறுத்தம் நடக்கலாம்.
இதெல்லாம் கனவாக
இன்னும் இருப்பதால்
கையூட்டுக்குக் கலைஞருக்கு
ஒவ்வாமை நோய்வந்து
கைகளில் அரிப்பு
உளச்சலைக் கொடுக்குது..