நீங்காத வடுக்கள்
ஏதோ என்னை மட்டும்
துரத்தி துரத்தி
விளையாடுகிறது விதி ........
எதார்த்தங்களுக்காக கூட
ஏக்கங்களால் தவிக்கிறேன்
நாளுக்கு நாள் .......
சுகங்களை எடுத்துக்கொண்டு
சோகங்களையே
சொத்தாக்கிவிட்டான் இறைவன் ........
அறிமுகம் இல்லாதவர்களைவிட
அறிமுகம் ஆனவர்களாலே
அவதிப்படுகிறேன் தினமும் ..........
விசுவாசமானவர்களைத்தான் தேடுகிறேன்
ஆனால் விஷமிகள்தான்
விடையாய் கிடைக்கிறார்கள் ...........
நன்றியை மறந்துவிட்டு
நஞ்சை உமிழ்ந்தவர்களாலே
நரகத்தில் வாழ்கிறேன் ..........
தோளில் சுமந்தவர்கள் கூட
துயரத்தை தந்ததுதான்
மிச்சம் ...........
சாதிப்பேன் என்று பயணிக்கையில்
சங்கடங்கல்தான்
வெகுமதியாய் ...........
இறைவனே புரிந்துகொள்ளமுடியாத
மனித மனத்தை
மனிதன் அறியமுடியாதது உண்மைதான் ......
ஆசையாய் பேசவேண்டிய
அன்பு உள்ளங்கள் கூட
அவமானம் தந்ததால்தான் காயம் .........
விபத்தால் வந்த விபரீத காயங்கள்
மாறிவிட்ட நிலையிலும்
மனத்தால் பட்ட காயங்கள்
இன்னும் வடுக்களாகவே ...........