தேவதைக் கடை

அழகழகான கடைகள்..
வானவில் சிறகுகளும்,
முள் மகுடங்களும்,
மந்திரக்கோலுமாய்
மாயக் கல்லாவை நிர்வகிக்கும்
மந்திரத் தேவதைகள்...
நெற்றி வியர்வையை
நிறைத்துக் கொடுத்தேன்;
அப்படியே
பெட்டியில் இட்டுவிட்டு
பொட்டலம் கட்டித் தந்தாள்...
சுபிட்சத்தை.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (29-Sep-14, 2:48 pm)
பார்வை : 84

புதிய படைப்புகள்

மேலே