IT என்னும் பம்மாத்து

மனித வாழ்வின் காலத்தடம் படாத இடங்கள் கூட கணினியின் தடங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்பதே நிஜமான உண்மையாகும்.

தொழில் சார்ந்த துறைகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும் போது, தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி வகை தொகை இல்லா வளர்ச்சியினை சந்தித்து இருக்கிறது. இதில் பெரும்பாலும் நிறுவனங்களின் வளர்ச்சி மலை அளவிற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களின் வளர்ச்சி மடு அளவிற்கும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

இங்கு நான் குறிப்பிடும் அனுவபங்கள் எனக்கானவை மட்டும் அல்ல. பல அல்லல் பட்ட மனிதரிகளின் அனுபங்களும் கூட.

ஒரு நாட்டின் வளர்ச்சியினை வேறறுக்க அதன் அடிப்படை கலாச்சாரத்தை அறுத்துவிட்டால் போதும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக இருந்த ஒரு கலாச்சாரம், சில தசாப்தத்தில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.

இது குறித்து கீழ் கண்ட தலைப்புகளில் எழுத உள்ளேன்.

வளர்ச்சிப் படிகள் - Stages
மீட்டிங் கூத்துக்கள் – Meetings
விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – Leave
மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – appraisal
குழுவுடன் சில நாட்கள் – Team outing
மற்றவை

எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்பதும், நிதர்சனங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (29-Sep-14, 3:19 pm)
பார்வை : 286

சிறந்த கட்டுரைகள்

மேலே