காதல் அரும்பும் காலம்
முகத்தில் திடீர் முகபரு ...
கண்ணழகியின் கண் பட்டு ...
கண்ணத்தில் முகப்பரு ....
நண்பர்களின் கிண்டலில் ...
காதல் அரும்பும் காலம்
வாழ்க்கையில் வசந்த காலம் ....!!!
கண்ணாடி முன் நின்று
கதாநாயகன் கற்பனை ...
சில நிமிடத்துக்கு ஒருமுறை ...
உடை மாற்றும் படலம் ...
எங்கே போவது என்று
தெரியாமல் ஓடித்திரியும்
கால்கள் -காதல் அரும்பும்
வசந்த காலம் .....!!!