விருதுகள் அளிப்போருக்கு விருதுகள்

வார்த்தைகள் வடிவமாகி எழுதியவை கவிதையானது
வார்த்தவை வரிகளானது வரைந்திட்ட ஓவியமானது !
வடித்திடும் கவிதைகளுக்கு தளமின்றித் தவித்தோம்
வழியறியாமல் இருந்தநாம் எழுத்தில் இணைந்தோம் !

எண்ணத்தை எழுதினோம் எழுதியதை பதிவிட்டோம்
கருத்துக்களை பகிர்ந்து களிப்பில் திளைத்திட்டோம் !
எழுத்தெனும் ஆலமரத்தின் ஆணிவேர் ராஜேஷ்குமார்
ஆழ்கடல் அமைதியாய் அவனியில் உலாவருபவர் !

ஊக்குவிக்கும் உள்ளமவர் ஊரறிந்த உருவமவர்
புதுச்சேரியில் அமர்ந்திட்டு புதுசெய்தி அறிவிப்பவர் !
போட்டிகள் நடத்திடும் பொன்னான அகமவருக்கு
நமக்கெலாம் கிடைத்திட்ட பெருமகனே அகனாவார் !

விருதுகள் பெற்றனர் இருவரும் சென்னையிலே
நிறைமனதுடன் வாழ்த்துகிறேன் வாழிய வாழியவே !
உடனிருந்து கண்டுதான் களிக்கவில்லை ஆனாலும்
உள்ளத்தில் உவகையோ வெள்ளமாய் பெருகியது !

வாழ்ந்திடுக வையத்தில் இருவரும் பல்லாண்டு
புரிந்திடுக தமிழ்தொண்டு புதுமைகள் பலகண்டு !
வாழ்ந்திடுவோம் தளத்தில் நாம் இணைந்திட்டு
வாழவைப்போம் நம் தமிழை கவிபுனைந்திட்டு !

கூடிடுவோம் வரும் பன்னிரெண்டில் சென்னையில்
பாடிடுவோம் பாசமுடன் நம்இல்ல விழாவினிலே !
அழைக்கின்றேன் அனைவரையும் அன்போடு நான்
விழைகின்றேன் விருப்பத்தை நம்தள நண்பர்களே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Oct-14, 9:02 am)
பார்வை : 396

மேலே