கடவுளர் கடை - கே- எஸ்- கலை
ஒரே தெருவில்
இரண்டு கடைகள்....
முதலாம் கடையில்...
சந்தனமாய்
கருங்கல்லாய்
கண்ணாடியாய்
மரச் சிற்பமாய்
பளிங்குச் சிலைகளாய்
உலோகமாய்
தங்கமுலாம் பூசியதாய்....
அழகழகாய்
அடுக்கி வைக்கப் பட்டிருந்தார்கள்
விலையுயர்ந்த கடவுளர்....
இரண்டாம் கடையில்....
நெகிழியாய்
களிமண்ணாய்...
குவிக்கப் பட்டுக் கிடந்தார்கள்
விலைக் குறைந்த கடவுளர்....
சிவன்...முருகன்...
இயேசு....புத்தன்...
இன்னும் யார் யாரோ....
இரண்டு கடைகளிலும்
விற்பனைக்காய் இருக்கிறார்கள்....
இரண்டாம் கடையில்
தொய்வின்றி நடக்கிறது
தெய்வ வியாபாரம் !
எந்த கடவுளை
வணங்கலாம் என்பதை
தீர்மானிக்கிறது
கையிலுள்ள காசு....!!!