அன்பே எனை ஆதரி

ஒ பெண்ணே !
உன்கடைவிழியில்
என் கவிதை பிறக்கிறது !

உன் கண்ணுக்கு கண் மை
என் பென்னுக்கும் அதுவே...

மைதீட்டிய விழிகள்
எழுத்தாணியை விட கூர்மை !

உன் கண்ணின் அசைவுகள்
என் கற்பனை குதிரையடி!

பற்பல பெண்மையை பார்த்தாலும்
உன்னுள் என் மனம் நிலைகுத்தி நிற்குதடி!

இதுதான் காதலா ?
ஆம் எனில் அதற்க்கு நன்றி சொல்வேன் !

உன் ஒற்றை விழி பார்வை
எனை செதுக்கி அழகாக்கி போனதடி !

பரட்டையாய் உலா வந்த எனை
பலர் வியக்க மாற்றிய காதல் !

அதிகாலை எழுப்பி எனை
அவசரமாய் அழகாய் மாற்றிய காதல் !

கோழையான எனை திமிராக
தெரிய செய்தது காதல் !

வீட்டிற்கு உதாவாகரை
உனைகண்டு பலருக்கும் உதவச் செய்தது காதல் !

நான் உதிர்க்கும் வரிகள் யாவும்
உன் கடைக்கண்ணில் உதயமடி !

உன் புன்னகை என் வசந்த காலம்
உன்னை காணாத நாளெல்லாம் இலையுதிர்காலமடி !

உண்ண உணவிருந்தும் உள்செல்ல மறுக்கிறது
தலையணை இறுக பற்றியும்
மனம் உறக்கமின்றி தவிக்கிறது
என்னருகில் நீ இருந்தால்
இன்ப மழை பொழியுமடி!

என் உயர்வுக்கு நீ !
ஊக்கமும் நீ !
உள்ளுயிர் நீ !
முழு மனிதனாக்கியது நீ !
மகிழ்ச்சியின் மொத்தமும் நீ !
இருந்தும் நான்...
உன்கையில் தவழும் மண்குடமடி !

எழுதியவர் : கனகரத்தினம் (2-Oct-14, 10:50 pm)
பார்வை : 88

மேலே