பெண்மையால் வாடுகிறேன்
உன் கண் விழி என்னை கவிஞன் ஆக்குதடி.
உன் கன்னக்குழி என்னை கனவில் கரைத்ததடி.
உன் மலரும் இதழ்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளுதடி.
நீ மூக்குத்தி அணியாமல்
நெஞ்சில் முள் குத்தி எரியுதடி.
உன் சிவந்த கரங்கள் என்னை தாங்குமோ அதை காணாமல் என் கண்கள் தூங்குமோ.
உன் மடியில் தலை சாய்த்தேன் இனி மரணமும் சுகம்தான்.
நீ மறைக்கும் மலர்கள் என்னை மழலை ஆக்குதடி.
நீ எட்டி நடந்தால் என் இதயம் இறக்கும்.
நீ கிட்ட இருந்தால் புது சொர்க்கம் பிறக்கும்.