உன் பக்கம் நான் இப்ப

வெண்பனிச் சாரலாய்
எனை வென்று போனாய்
கள்வனின் காதலியாய்
எனை திருடி சென்றாய்
பரிசம் போட்டு
எனை உன் பக்கம் இழுத்தாய்
பரிமாணம் இன்றி
எனை வளர்த்து போனாய்
திசையறியா பாதையை
காட்டி நடந்தாய்
பேரு சொல்லி
எனை பேசிப் போனாய்
அடம் பிடித்து
எனை அடைந்து சென்றாய்
வர்ணம் இன்றி
எனை தீட்டிப் போனாய்
காக்கி அணிந்து
எனை தூக்கி சென்றாய்
கடலைத் தாண்டி
எனை கூட்டிப் போனாய்
காகிதம் இன்றி
எனை எழுதிப் போனாய்
பூக்கள் இன்றி
எனை பறித்து சென்றாய்
காற்று இன்றி
எனை வருடி சென்றாய்
கவிதை இன்றி
எனை வாசித்து சென்றாய்
பனி இன்றி
எனை உறைய செய்தாய்
நெருப்பு இன்றி
எனை உருக்கி சென்றாய்
கண்கள் இன்றி
காதல் செய்தாய்
காதல் செய்து
எனை காத்து சென்றாய்
உன் பக்கம் நான் இப்ப