என்ன ஆ ஆ பொண்ணுடா அவள்

குருட்டு வெளிச்சத்தில் எட்டி பிடிக்கிறேன் நிலவை
குளியல் அறையிலும் ஒரு காதல் வசை பாட்டு
குறுக்கும் நெடுக்கும் அவள் வீடு தெருவை அளக்கும் கால்கள்
காதல் மாயஜலத்தில் அவள் மந்திர கோல்
நேற்று இன்று ; இன்று நாளை என்று பார்வை கணக்கை காலண்டரில் எழுதுகிறேன்
கணநேர ஜுவாலையாக கருகி பூக்கும் மனம்
ஒரு ஓவியனுக்கு சொந்தமான துரிகை அவள் விரல்
அவளே ஓவியமாய்
ஒளிப்பதிவாள எடுக்க மறந்த கூந்தல் தேசம்
விலகி விலகி நினக்கிறேன் நெருக்கி கன்னத்தை திருகிவிட்டு செல்கிறாள்
சற்று தலை குனிந்தவாறு ........
என்னா ஆ ஆ பொண்ணுடா அவள் !!!!!