அன்னை நீ சென்றதினால்
அன்னை நீ சென்றதினால்
அனாதை யாகிவிட்டேன்...
விழியுனை இழந்ததினால்
வீதியிலே நின்றுவிட்டேன்...
அன்னை நீ இருந்திருந்தால்
அவல நிலை எனக்கில்லை ...
பலியான உன் வாழ்வை
பாசக் கண்ணீரால் நனைக்கின்றேன்.
எந்த நிலையில் இறந்தாயோ
என்னை நீ மறந்தாயே...
பாச மழை பொழிந்தாயோ
பாவி எனை பெற்றாயே...
தந்திர உறவினரும் -என்னை
தரித்திரன் நீ என்றார்கள்...
தாயில்லா குழந்தையம்மா -என்னை
தாலாட்ட நீஇல்லை...
பாலூட்ட யாரும் இல்லை -என்
பசியறிய நீயும் இல்லை...
பட்டினில் வாடுகிறேன் - நான்
பரிதவித்து அலைகின்றேன்...
பச்சைக் குழந்தையம்மா - நான்
பசியால் துடிக்கின்றேன்...
மழலை எனை விட்டு - நீ
மறந்து தான் சென்றாயோ......
உன் பிள்ளை எனக்காக -நீ
உயிர் பெற்று (மறுபடியும்) வாராயோ....
பிரிந்த உன்னை நினைத்து -என்
பிஞ்சு மனம் தவிக்கிறதே.....
அனாதை யாகிவிட்டேன்
அன்னை நீ சென்றதினால்.....