இதுதான் காதலா

ஏன் சிரிக்கிறாய் என்றேன் ,
நீ என்னுடன் இருக்கையில் என்
உதட்டில்
சிரிப்பு மறையாது என்றாய்
.
ஏழு பிறப்பு என்ன ,
நூறு பிறப்பு எடுத்து
உன்னுடன் இருப்பேன் உன்
புன்சிரிப்பை சிறைபிடிக்க
..
இதற்க்கு பெயர் தான்
காதலா ?
எனில் நான் உன்னை என்
வாழ்விலும்
மேலாக காதலிக்கிறேன் ...
கண்ணிமைக்கும் நேரம் எல்லாம்
என்
வாழ்வு இருள்வதை உணர்ந்தேன்
,
ஏன் என் கண் இமைக்கும்
நொடியில்
உன்னை காண
இயலாது என்பதாலா ...
உன்னை காணாத அந்த
நொடியில்
என் இதயம் துடிப்பதை கூட
மறுப்பது ஏனோ
இதற்கும் பெயர் காதல்
என்றால் ,
ஆம் நான் உன்னை இமைக்க
மறந்து
காதலிக்கிறேன் ...
உன் கண்ணசைவில் அகிலத்தையே
வெல்ல காத்திருக்கிறேன் ,
உன் விழி பார்த்து என்
வழியும் ,
உன் பாதங்களில் என்
பாதைகளும் முடிகிறது.
இதை காதல் அன்றி வேறென்ன
சொல்வது
ஆம் நான் உன்னை போல்
யாரையும்
காதலிக்கவில்லை ....
உன்னை போல் யாரும்
என்னையும் காதலிக்கவில்லை

எழுதியவர் : star boys (10-Oct-14, 9:50 am)
சேர்த்தது : Karthi
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 57

மேலே