அருமை
உன் சுயம்வரத்தில்
வெற்றி பெற்றேன்!
நீ நடத்திய
ஜல்லிக்கட்டில்
வெற்றி பெற்றேன்!
நீங்களும்
வெல்லலாம் ஒரு கோடி
என்று சொல்லி நீ
நடத்திய போட்டியிலும்
உன்னை வெற்றி கொண்டேன்!
இன்னும் என்ன
செய்ய வேண்டும்
எனக் கேட்டேன்?
இன்னும் யோசிக்கிறாய்..
யோசிக்கிறாய்..
யோசிக்கிறாய்...!
உன் யோசனையின் முடிவு
எனக்கு சாதகமாக
யாசிக்கிறேன்!
என் அழகு ..
மற்ற எதனையும்
மிஞ்சும்
எனது நிறம்..!
எனக்கு நீ தரும்
விலை..
என எதிலும்
நானே உனக்கு
சரியான தேர்வு
என்பார்கள் உன் தோழிகள்!
இன்னும் யோசிக்கிறாய்..
எனக்கு இது தலை தீபாவளி ஆக்கி விடு..
ஹையோ !
ஏன் இன்னும் யோசனை!
ஆறு மணி நேரமாக..
கையில் என்னை எடு..
ம்...சீக்கிரம்..
நாளைக்கு வந்து மாற்றி விடாதே!
இந்த புடவை பிடிக்கவில்லை என்று!