காதல்

விடிந்த பின்பும்
விழித்த பின்பும்
விழி திறக்க மட்டும்
மனதோடு
அச்சம்

விடிய விடிய
கனவில்
காதல் நாடகம்
நடத்திய

என் நாயகி

விழி திறந்ததும்

இமை வழியே
இறங்கி விடுவாளோ

என்ற
குழப்பம்
இமை கதவுகளை
சாய்த்தே
வைத்திருக்கிறது

எழுதியவர் : ந.சத்யா (10-Oct-14, 11:51 am)
Tanglish : kaadhal
பார்வை : 64

மேலே