‪‎தீபாவளிக்கு‬ முதல் நாள்

இன்னும் சில மணி நேரங்களில்
தீபாவளி ...
தேர்வு எழுதிய நாளை விட..
ரிசல்ட் வரும் நாளில்
பட படக்கும் மனம் போல ..
பக்கத்து வீடுகளில் ..
பத்தவைக்க ...தெருவெலாம்
வெடியின் சத்தம்...
இன்னும் என்னுள் ஏக்கத்தை
மட்டும் பயிர் செய்கிறது ...
எவ்வளோவோ காரணம்
சொல்லி சமாளிக்கும் ....அம்மா ...
சமரசம் ஆகாத என் மனம் ...
மிடுக்கான ஆடை ...
சுருள் கேப் துப்பாக்கி ..
சின்ன சின்ன வெடிகள் ..
அப்பா அள்ளி வருவார் ..என
திசை மாறாமல் ..
என் விழியை அள்ளி வைத்தேன்
வாசலில் .....
காலம் கடந்து ..உறங்கினேன் ..
அம்மாவின் மடியில் ..
அங்கு இங்கு கடன் வாங்கி
அப்பா வாங்கி வந்த
துப்பாக்கியும் ..புது துணியும் ..
என் தலை மாட்டில்
வைத்து ..
தலை கோரும் என் தந்தை விரல்கள் ..
நேரம் இரவு 11 மணி ....
இப்படி எனை போல ..
தீபாவளியை எதிர்பார்த்த ..
நட்புகளோடு ...
தீபாவளிக்கு முதல் நாள் ..
‪#‎குமார்ஸ்‬ ....

எழுதியவர் : குமார்ஸ் (10-Oct-14, 11:10 pm)
பார்வை : 122

மேலே