அமைதிக்காக
![](https://eluthu.com/images/loading.gif)
நம்மில் பலர்
எழுதுகிறோம்
சிலர்
செய்கிறார்கள்
அவர்களில் இருவர்
2014 ன் நோபலை
அமைதிக்காக வென்ற
கைலாஷ் சத்யார்த்தி
மலாலா யூச ஃப்சாய்
(MALALA YOUSAFZAI )
செய்த பணி
குழந்தைகள் மறுவாழ்வு .
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
கைலாஷ் சத்யார்த்தி பள்ளி நாட்களிலிருந்தே நிராதரவான ஏழைக்
குழந்தைகளுக்கு உதவுவதை வாழ்க்கை குறிக்கோளாக கொண்டவர்
அறுபது வயதினர் .பாரதத்தின் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்
மலாலா 17 வயதே நிரம்பிய பாகிஸ்தானை சேர்ந்த பெண்
பெண்கள் கல்வியை வலியுறுத்தியதற்காக அவதிப்பட்டார்
இப்பொழுது இங்கிலாந்தில் படித்து வருகிறார்.
திருமணத்திற்கும் வாக்களிப்பதற்கும் வயது நிர்ணயிக்கிறோம் .
சிந்தனைக்கும் செயலுக்கும் வயது ஓர் அளவுகோல் இல்லை .