நீர் தீர்ப்பு

வயலுக்கும், வரப்பிர்க்கும்,
வழக்காடியது போதாதென்று,
நீருக்கும் நீதி கேட்டு செல்கின்றோம்,
வழக்காட வழியின்றி
வானத்தை பார்க்கிறேன்...
நீதிமன்றத்தின் நீர் தீர்ப்பு,
நீர்த்துப்போயினும்...
வான் மன்றத்தின் இடிமுழக்கமாவது
இன்பம் சேர்க்காதா என்று...