உலக சாதனை

பதினேழு வயதில் நோபல் பரிசு
ஆயிரம் கின்னஸ் சாதனைகளும்
அதற்கு இணையாகாது

கும்பலைக் கூட்டி
உயிருக்கு இணையான நேரத்தை
விளம்பரத்தோடு வீணடித்து
கின்னஸ்சில் இடம்பெறும் சாதனைகளால்
யாருக்கும் எந்தவிதப் பயனுமில்லை.

சின்னப்பெண் மலாலாவின் சிந்தனைபோல்
வளர்ந்தவரின் சிந்தையிலும் உதிக்கவேண்டும்

நேரத்தைக் கொள்ளையிடும் வேடிக்கையை
இனிமேலும் செய்யாதீர் வாடிக்கையாய்

சமுதாயம் முன்னேற வழிகாட்டும்
சாதனைகள் படைத்திட விழித்தெழுவீர்!

எழுதியவர் : மலர் (11-Oct-14, 12:39 pm)
பார்வை : 2626

மேலே