எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள்------விரல் மாறும் தொடர்கதை பாகம்14---ப்ரியா

எவர்ஸ்மைல் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் கொலை செய்தது சரஸ்வதிதான் என உறுதிப்படுத்தப்பட்டது.......

நடந்துகொண்டிருந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி “ இல்ல இல்ல நான் கொலை பண்ணல......” என்று பலமாக கதறி மயங்கி வீழ்ந்தாள்.

மயங்கியவளின் காதில் ஓர் ஒலி கேட்டது. “ டென்ஷன் ஆகாதேடா.. நான் தான் கொன்னேன். நான் தான் கொன்னேன். “ சரஸ்வதியின் காதலன் சத்யா ஆன்மாவின் குரல்.

சரஸ்வதி மயக்கம் போட்டு விழுந்ததால் அந்த நீதிமன்றவளாகம் கொஞ்சம் பரபரப்படைந்தது.

அந்த சமயம் தண்ணீர் தெளித்து அவளை சுயநினைவுக்குக்கொண்டு வந்தனர்.....எழும்பி சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்ணில் ஒரு பரிதவிப்பு இருப்பதை உணர்ந்தார் அந்த நீதிபதி மைக்கேல் ராணி.......!

அந்த நீதிபதியும் ஒரு திருநங்கை என்பதாலோ தெரியவில்லை ஆரம்பத்திலிருந்தே இந்த கேஸ் அவங்களுக்கு ஆழ்மனதில் நன்கு பதிந்து ஒருவித படபடப்பை ஏற்படுத்தி உறுத்திக்கொண்டிருந்தது.....

சரஸ்வதியின் பார்வையில் ஏதோ ஒரு பரிதவிப்பு தெரிய அவளை ஒருமுறை தெளிவாய் பார்த்தார் ராணி,

"நான் தப்புபண்ணல மேடம், எனக்கு எதுவும் தெரியாது நான் வேணும்னு பண்ணல எனக்கு தண்டனைக்கொடுத்திராதிங்க" என்று கதறினாள் சரஸ்வதி.....நான் தவறு செய்யவில்லை என்றாலும் இந்த தண்டனைய ஏத்துப்பேன் ஆனால் இந்த குழந்தை என்று சொல்லிக்கொண்டே தன் வயிறைத்தடவினாள்........!

அவளையே பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை நோக்கி "உங்கக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ஒரே ஒருமுறை பேச வாய்ப்பு கொடுங்க மேடம்"என்று கெஞ்சினாள் சரஸ்.

என்ன சொல்லப்போகிறாள் எனபார்ப்போம் என நினைத்த நீதிபதி ராணி......சரி இவங்கள அந்த அறைக்கு அழைத்துவாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார், நான்கு காவலாளிகளின் பாதுகாப்பில் அழைத்து செல்லப்பட்டாள் சரஸ்வதி.........!

நீதிபதியின் முன்னாள் உட்காரவைக்கப்பட்டாள்.

ம்......சொல்லு என்ன விஷயம்? என்கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாய்? எதற்காக எவர்ஸ்மைல கொலைப்பண்ணினா? இப்போ எதற்காக மறைக்கிறாய்?எதுனாலும் என்னிடம் வெளிப்படையாக பேசு என்று தாழ்வான குரலில் சொன்னார் நீதிபதி.

கண்களில் கண்ணீர் ததும்ப நிமிர்ந்து பார்த்த சரஸ்வதி சுற்றிநின்ற காவலாளிகளை பார்த்துவிட்டு மௌனமானாள்.

(இதை கவனித்த நீதிபதி கண்ஜாடையால் அவர்களை போகச்சொன்னார்)

அவர்கள் சென்ற பிறகு இப்போது சொல் என்ன விஷயம்?என்றார்!

எதுவும் பேசாமலேயே அழஆரம்பித்தாள் சரஸ்வதி.........சிறிதுநேர அழுகைக்குப்பின் அழுகையை நிறுத்திவிட்டு.....
மேடம் நானும் சத்யாவும் சந்தோஷமாக வாழவேண்டியவங்க சில சந்தர்ப்ப சூழ்நிலையால விதி என்கிட்ட இருந்து என் சத்யாவ பிரிச்சி என்ன இப்டி பட்டமரம்போல ஆக்கிவிட்டது, எனக்கு என்ன பிரச்சனைனாலும் கூடவே இருந்த சத்யா இப்போ என்னையும் இந்த உலகத்தையும் விட்டு மொத்தமாய் போய் சேர்ந்துட்டான்,,,,,,நானும் இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டேன்...... வேறு வழி இல்லாமல் இந்த எவர்ஸ்மைல் கூட்டத்தோடு வந்து சேர்ந்துவிட்டேன்" என்று சொல்ல சொல்ல அழுதாள் சரஸ்வதி.......!

சரி!சரி!அழாத அழாம விஷயத்த சொல்லு என்னன்னு தெரிஞ்சாதானே என்னாலயும் உதவி பண்ண முடியும் என்று சொன்னார் நீதிபதி ராணி....!

எவர்ஸ்மைல் தனக்கிணையா இவங்கள எல்லாம் சேர்த்து தவறான பாதைக்கு கொண்டுசென்றாள், தன் கூட்டத்திற்கு நல்லது செய்கிறேன் என்றபெயரில் பலதவறுகளை தானும் செய்து மற்றவர்களையும் செய்ய தூண்டுகோலாக இருந்து வந்தாள், இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவர்களுக்கு நல்லது செய்கின்றேன் என்ற பெயரில் அனைத்தும் தவறாகவே செய்து கொண்டிருந்தது அந்த கூட்டம்.......என்னால் எதுவும் செய்ய முடியவில்லை....

தினமும் என் சத்யாவின் புகைப்படத்தை எடுத்துப்பார்த்து என் மனதில் உள்ள குறைகளையும் சந்தோஷத்தையும் அவனிடம் பகிர்ந்து கொள்வேன் அவனும் எனக்கு ஆறுதலாய் பேசிக்கொள்வதாய் நினைத்துக்கொள்வேன்.

இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது........அன்னிக்கு இரவு(எவர்ஸ்மைல் கொலை செய்யப்பட்டநாள்)

வழக்கம் போல் என் மனதில் இருந்த கவலையை என் சத்யாக்கிட்ட சொல்ல ஆரம்பித்தேன் எவர் ஸ்மைல் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று அழுத்தமாய் சொன்னேன்........அப்பொழுது அந்த சமயம் புகைப்படத்துல இருந்து சத்யா என்னிடம் பேசினான் அதை நான் உணர்ந்தேன்.

"நீ கவலைபடாதடா செல்லம் எல்லாம் நல்லபடியா நடக்கும் நான் பார்த்துக்குறேன்" என்று சொன்னான், இவ்ளோதான் நடந்தது நினைவிருக்கிறது அதுக்கப்புறம் என்ன நடந்திச்சின்னு தெரில......?????

நானும் தூக்கக்கலக்கத்தில் திடீரென விழித்துப்பார்க்கும் போது எவர்ஸ்மைல் தூக்கில தொங்கிய காட்சி...? அந்த அறையில் நான் மயக்கமுற்றுக்கிடந்தேன் அந்த நிலையை பார்த்த எனக்கு சத்யா என்னிடம் இரவு பேசிய அனைத்தும் நினைவுக்கு வந்தது நான் சத்யாவிடம் பேசிட்டிருக்கும்போது நான் என் அறையில்தான் இருந்தேன் ஆனால் அப்போது எவர்ஸ்மைல் அறையில் மயங்கி கிடந்தேன் சத்யாவின் புகைப்படமும் என்பக்கத்தில் இருந்தது..........!

இதெல்லாத்தையும் வைத்துப்பார்க்கும்போது என்மேல் புகுந்து சத்யாதான் இதெல்லாம் பண்ணிருக்கான் என்று புரிந்துகொண்டேன்.

அதிலிருந்து தப்பிக்க எனக்கு வேறு வழி தெரியல?இப்படியே விட்டால் போலிஸ் கேஸ்ன்னு வந்தா கண்டிப்பா பெரிய பிரச்சனை வரும் இதிலிருந்து தப்பிக்க என்னவழி? என்று நினைத்தபோதுதான் எனக்கு இந்த வழி கிடைத்தது......!

எவர்ஸ்மைல் தானாகவே தன் போக்கு பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக நானே அவர் எழுதியது போல் ஒரு கடிதம் எழுதி மற்றக்கூட்டாளிகளும் நம்பும்படி யாருக்கும் சந்தேகம் வராதபடி பக்காவாப்பண்ணினேன்....

யாரும் கண்டுபுடிக்கமாட்டாங்கன்னு நினச்சேன் ஆனா......இப்.....போ.....என்று விம்மி விம்மி அழுதாள் சரஸ்வதி.....!

"மேடம் அந்தகூட்டமே சரி இல்ல....தப்பு மேல தப்பு பண்றாங்க அவங்கள இப்டி பண்ண தூண்டி விடுறதே அந்த எவர்ஸ்மைல்தான் அவதான் ஆணிவேர் மாதிரி இருந்தா அதான் ஆணிவேரையே என் சத்யா புடுங்கிட்டான் என்று உணர்ச்சிபொங்க பேசினாள் சரஸ்வதி..........திருநங்கைகள் யாரும் சரி இல்லை அவங்களே அவங்க இனத்த தவறா நடத்துறாங்க தன் வர்க்கம் நல்லா இருக்கணும்னு நினச்சி அவங்களே தப்புபண்றாங்க எனக்கு அந்த கூட்டமோ?இல்ல அதுங்களையோ புடிக்கல என்று வெறுப்பாய் சரஸ்வதி சொல்ல..........

ஏய்! நிறுத்துடி.? உன்ன உட்காரவச்சி பேச இடம் தந்தா நீ என் இனத்தையே தப்பா பேசுறியா?எவர்ஸ்மைல பற்றி மட்டும் சொன்னாக்கூட தப்பில்ல மொத்தமா பேசுறா..? என்று கோவமாய் பேசினார் நீதிபதி ராணி.

சற்று அதிர்ச்சி அடைந்து திரும்பிய சரஸ்வதி என்ன என்பது போல் புருவம் உயர்த்தி புரியாமல் பார்த்தாள்....?

என்ன முழிக்கிறாய் என்ன பார்த்தால் உனக்கு எப்படித்தெரிகிறது என்று தனது மேல்அங்கியை கழற்றி புடவையில் நளினமாய் நடந்து கேட்டாள்?????

நீதிபதியின் செய்கையைப்பார்த்த சரஸ்வதி பதில் எதுவும் பேசாமல் மிரட்சியுடன் சிலைபோல் நின்றாள்..?

மற்றவங்கள பொறுத்தவரரைக்கும் நான் புடவைக்கட்டிய அழகியப்பெண்,உயர் பதவியில் இருந்து கைநிறைய சம்பளம் வாங்கும் ஒரு பெண் ஆனால் உண்மையில் நான் பெண் அல்ல ஒரு திருநங்கை என்றதும்..........

அப்படியே ஆடிப்போய்விட்டாள் சரஸ்.....(கற்பனையில் கூட அவங்கள திருநங்கையாக நினைக்க முடியவில்லையே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்,குரல் மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தது)

ஒருதிருநங்கையான நான் இன்று இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறேன் என்றால் அதற்குக்காரணம் எவர்ஸ்மைல் மாதிரி எனக்குக்கிடைத்த ஒரு தலைவிதான்.........என்றுதன் கதையை சொல்ல ஆரம்பித்தார் நீதிபதி.

எனது சொந்த இடம் கன்னியாக்குமரி அப்பா,அம்மா,அண்ணன் என சந்தோஷமாய் வாழ்ந்து வந்தேன் நான் சின்னவன் என்பதால் எனக்கு அளவுக்கு அதிகமாய் செல்லம் தந்து வளர்த்தனர்....!

பள்ளியில் படிக்கும்போது "மைக்கேல் ராஜா"ன்னு சொன்னா தெரியாதவங்களே இருக்கமாட்டாங்க அப்டி எல்லாருக்கும் என்னைப்பிடிக்கும் பஞ்சு மாதிரி குண்டா அழகாய் இருப்பேன்.....என் பிரண்ட்ஸ் என்னிடம்
டேய் நீ பெண்பிள்ளை மாதிரி ரொம்ப அழகாய் இருக்கா என்று சொல்லி அடிக்கடி முத்தம் தந்து கட்டியணைத்துக்கொள்வாங்க அதுலயும் சில பிரண்ட்ஸ் "நீ எவ்ளோ அழகா இருக்கா நீ பொண்ணா பிறந்திருந்தா நானே உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிப்பேன்" இப்படி எல்லாம் சொல்லுவாங்க........

இத எல்லாம் கேட்க கேட்க எனக்கே ஒரு இனம் புரியாத ஆசை,மாற்றம் வந்துடிச்சி, அப்புறம் நானே என்ன கொஞ்சம் கொஞ்சமா மாற்ற ஆரம்பித்தேன்.....என் பிரண்ட்ஸ் சொன்னமாதிரி பொண்ணுமாதிரி டிரஸ்பண்ணி மாறுவேடப்போட்டில எல்லாம் கலந்துக்க ஆரம்பிச்சேன்.........

10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தேன், பன்னிரெண்டாம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் கிடைக்கும் என நல்ல படியாக பரீட்சையும் எழுதினேன் அப்பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது............??????

நான் ஒரு ஆணாக இருந்துவிட்டு குணங்களிலும் செயல்களிலும் முழுவதுமாய் பெண்ணாக மாறியதை உணர்ந்துகொண்டேன்.........

இதற்கு காரணம் நானா?என் நண்பர்களா?இறவனின் நாடகமா?இயல்புக்கு மாறானா மாற்றத்தை ஏற்படுத்திய குரோமோசோம் பிறட்சியா?இல்லை அளவுக்கதிகமான புரோஜெஸ்டிரான் சுரப்பா? என்று எதுவும் புரியாத நான் குழம்பியிருந்தேன்.......!

அந்த சமயம்.......

என் பெற்றோரும் அண்ணனும் என்னை வெறுத்து ஒதுக்கினர் "ஒன்பது ஒன்பது" என்று என் அண்ணனே அவன் தோழர்களுடன் சேர்ந்து கிண்டலடிப்பான்.......ஒருநாள் என் அப்பா காரில் ஏறு என்று என்னை அழைத்துசென்று எங்கோ தெரியாத ஆள் அரவமில்லாத காடுபோன்ற இடத்தில் விட்டு விட்டு வந்து விட்டார் .......

எங்கு போவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த என்னைப்பார்த்த அனைவருமே ஒதுக்கினர்..... அந்த சமயம்தான் அந்த அம்மாவைப்பார்த்தேன் அவங்கதான் "ஷக்தி" என்னை அழைத்து சென்று அவர் பராமரிப்பில் வளர்த்து வந்தார்..........!

ஷக்தி அம்மாவும் ஒரு திருநங்கை என்பதால் என் ஆசைகளை கேட்டு எனக்கு அவர்கள் ஏற்பாட்டில் அடுத்தடுத்து சில அறுவை சிகிட்சைகளும் செய்து என்னை இப்படி மாற்றினாங்க என்று பெருமையாய் சொன்ன நீதிபதியை.... வைத்த கண்வாங்காமல் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சரஸ்வதி......???

உன் பார்வை எனக்கு புரிகிறது என்று சொன்ன நீதிபதி ராணி மறுபடியும் பேச ஆரம்பித்தார்........

நான் நினைத்தமாதிரி 12-ம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தேன் என் ஆசைப்படி "மைக்கேல்ராஜா" என்ற என் பெயரை மைக்கேல் ராணி என்று மாற்றிக்கொண்டேன்.

அதுமட்டுமல்ல என்னைமதிக்காதவங்க ஏளனமாய் பேசினவர்கள் எல்லாம் என்னை தேடிவரணும் நல்ல புகழோட எனக்கு புடிச்ச உயர்பதவில இருக்கணும்னு ஆசைப்பட்டேன் தூங்காம இரவு பகல் பார்க்காம விடாமுயற்சி எடுத்து இன்னிக்கு இவ்ளோ பெரிய ஆளா இந்த பதவியில இருக்கேன்...........

அப்போ அன்னிக்கு என்ன ஏத்துக்காம இருந்தவங்க? இப்போ இன்னிக்கும் ஏத்துக்கலதான், ஏத்துக்காம இருந்தாலும் இன்று என்னைப்பற்றி பெருமையா பேசிக்குறாங்க "சாதிச்சிட்டா நல்ல பொண்ணுதான்" என்று என் காதுபடவே பேசியிருக்கின்றனர் ..............இதுக்கெல்லாமே காரணம் எவர்ஸ்மைல் மாதிரி எனக்கு கிடச்ச அந்த அம்மா(திருநங்கை) ஷக்தி தான்.....என்று உணர்ச்சிக்கு மீறி வந்த கண்ணீரைத்துடைத்துக்கொண்டு சரஸ்வதியின் முன் வந்து நின்றாள் அந்த நீதிபதி......!

தன்னை மறந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள் சரஸ்வதி..???

இதயெல்லாம் எதுக்கு உன்கிட்ட சொல்லிட்டிருக்கிறேன் தெரியுமா? எங்க இனத்தப்பற்றி நீ பேசிய வார்த்தைகள்....திருநங்கைகளைபற்றி சொல்லிய தவறானக்கருத்துக்கள் என்று கோவமாய்ப்பார்த்தாள் ராணி......

உங்க வாழக்கையில் நீங்க சிகரத்த தொட காரணமாக இருந்தது அந்த திருநங்கைன்னு சொல்றத நான் ஆமோதிக்க்றேன் மேடம் ஆனால்.........என்று இழுத்தாள்...........சரஸ்.........

என்ன ஆனா.........சொல்லு என்று கோவமாய் அவளிடம் வந்தாள் மைக்கேல்ராணி!

நீங்க நினைக்கிறமாதிரி இந்தக்கூட்டம் நல்லவங்க இல்ல.........எவர்ஸ்மைல்தான்......

அந்த எவர்ஸ்மைல்...........அவ.......அவ.....எப்படிப்பட்டவ தெரியுமா.....அவ என்னெல்லாம் பண்ணினாதெரியுமா??????

என் சத்யா.....சத்யா.......சத்..............யா....??????





விரல்மாறும் தொடர்கதை தொடரும்...........!

எழுதியவர் : ப்ரியா (13-Oct-14, 4:03 pm)
பார்வை : 235

மேலே