உண்மையில்லா உறவுகளே
உயிர்போன்ற உறவென்று
உள்ளவர்கள் சொல்லிவைக்க
உள்ளமதை நோகவைக்கும்
ஒன்றுமில்லா சொந்தங்களே ...........
இரைதேடும் கழுகாக
இருந்தவற்றை பிடிங்கிக்கொண்டு
இழந்தபின்னே நிறம்மாறும்
பச்சோந்தி வம்சங்களே ...........
நெஞ்சத்திலே வஞ்சகத்தை
ஒளித்துவைத்த உறவுகளே
உதட்டினிலே சிரிப்புதனை
சிதறவிட்ட சிகரங்களே ...........
இரக்கமதை மறந்துவிட்ட
இறுக்கமான இதயங்களே
இன்சொல்லால் இதயத்தை
கீறிவிடும் பந்தங்களே ...........
ஏற்றிவிட்ட ஏணிதனை
இடறிவிடும் உள்ளங்களே
என்றைக்கும் நன்றியையே
நினைக்காத சொந்தங்களே ............
கல்லாலே நெஞ்சாலே
கதறவிடும் சொந்தங்களே
கருணைதனை மறந்துவிட்டு
காலானாகும் பந்தங்களே ........
மாற்றாரின் மனம்கூட
மாறுகின்ற வேளையிலே
மறைமுக எதிரியாய்
மாறுகின்ற சொந்தங்களே ............
பொய்யான வார்த்தையால்
புகழுகின்ற சொந்தங்களே
முள்ளாலே மாலைதனை
சூட்டிவிடும் பந்தங்களே .............
பணம்தானே பெரிதென்று
பார்த்திருக்கும் சொந்தங்களே
பாசம்தன்னை குப்பையாய்
ஒதுக்கிவிடும் பந்தங்களே ..........
என்றைக்கு திருந்துமிந்த
ஏமாற்று சொந்தமெல்லாம்
எக்கத்தாலே மூழ்குதைய்யா
உலகில் நல்ல உள்ளமெல்லாம் ........