விழியதிகாரம் - 7- சந்தோஷ்

நன்றி :
ஓவியம் : திரு, மாருதி அவர்கள்
------------------------------------------------------------

விழியதிகார நாயகியின் நடையழகு.!
அடியெடுத்து வைக்கும்
விழியாளனின்
ஒவ்வொரு பாத அடியிலும்
அவள் விழிகளில்
எனக்காகவே எழுதப்பட்டிருக்கும்
காதலிசை குறியீடுகள்.

சாலையோர பாதையில்
அவள் நடந்தால்
மென்பாதங்களை
பூக்கள் முத்தமிடும்

அசைந்தாடும் அவள்
பின்னழகில்-என்
பாக்கள் வெட்கப்படும்.

விழியாள் நடந்தால்
இசைய வேண்டும்
இளையராஜாவின் இசையும்- இந்த
மன்மத ராஜாவின் தலையும்.

அவளின்
பஞ்சு பாதங்களை
தொட்ட தார்சாலைகள் கூட
மெட்டுப்போடுகிறதாம்..!

காதலின் அலைவரிசையில்
எனக்கு கேட்கிறது.

உங்களில் யாருக்கும் கேட்கவில்லைதானே.. ?

கடவுளே...! என் விழியாளை
உற்றுப்பார்த்தவர்கள் யாவரும்
ரசனை சொரணையின்றியே
அவளை கடந்திருக்கவேண்டும்.

உற்றவன் எமக்கு மட்டுமே
உரிமையான விழியாளின்
இடையழகில்
சொக்கி கிறங்கி மயங்கி
வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும்
என்னில் உண்டாகும்
சபலநாதத்தில்....!

-------
(விழியதிகாரம் தொடரும் )

-இரா.சந்தோஷ் குமார்

-------------------------------

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (15-Oct-14, 5:43 pm)
பார்வை : 285

மேலே