எட்டாத தூரத்தில் Aval
பிரம்மன் காம்பஸ் இல்லாமல் வட்டமாக வரைந்தான் அவள் முகத்தை -
அவள் முகம் ஒரு வட்ட நிலா
அவள் கண்கள் மின்னும் நிலவின் பக்கத்தில் இருக்கும் நட்சத்திரத்தை போல
அவள் முகத்தில் மலர்ச்சி- நிலவின் ஒளியைப் போல
அவள் சுவாசக் காற்று உஷ்ணம் அல்ல - நிலவின் குளிர்ச்சி
நிலவு வளரும் தேயும் -அவள் என்றுமே என் நெஞ்சத்தில் நிலைப்பவள்- ஆனால் நிலவைப்போலவே எட்டாத தூரத்தில் அவள்