என்னிடம் வா நிம்மதி தருவேன் -ஜென்னி
அழகு
...அர்த்தமற்று போக
பயம்
...உடைத்தெரிய
வேகம்
...வெறியாக
ரத்தம்
...நீராக
ஆன்மா
...சுதந்திரமாக
மனிதம்
...வீடாக
மாற்றம்
...நிலையாது போக
மன்னிப்பு
...மறந்து நிற்க
பாசம்
...பதியாது போய்விட
தடைகள்
....தகர்த்தெறிய
ஓடி வா என்னிடம்
...நிலையான நிம்மதியும்
யாரும் அழிக்கமுடியாத
...சந்தோசமும்
எதுவென காட்டுவேன்
.....உன் உயிர் கொண்டு [கொன்று]