விடுதலை குரல்

சுதந்திரம் பெற்றும் சூனியமாய் -
நிரந்த அடிமைகளாய் இன்றும் -
ஜாதி மதம் எல்லை என்னும்
மாய வலைக்குள் ............

மனித உறவுகளை உடைத்து
மத கதவுகளைகாக்க எத்தனை போராட்டம்
விடியல் கிடைத்தும் வெளிச்சத்திற்கு
வராத மனித குணம் .............

பிறப்புமுதல் இறப்பு வரை
மதமா சோறுபோடுகிறது
மதத்தை தலையில் வைத்து
மனிதத்தை குப்பையில் போடுவதா ............

இறக்கம் அன்பு கருணையைத்தான்
இறைவன் சொல்லுகிறான் எல்லா கதைகளிலும்
மதங்களை வாழவைக்க
மனிதர்களை கொல்ல சொல்லவில்லை ...........

ஆயுதங்களுக்குதான் அறிவில்லை
அதை ஆளுகின்றவனுக்குமா
ஆக்குவதைவிட அதை
அழித்தல் சுலபம் ............

விபத்தை பார்த்து துடிப்பவன்
வெட்டுவதற்கு துணிகிறான்
காயங்களும் வலிகளும்
வேருவேரில்லை ........

திருந்த கூறும் கோட்பாடுகளை எல்லாம்
திரித்து கூறியே குழம்பிவிட்டான் மனிதன்
ஆக்கும் சிந்தனைகளைவிட
அழிக்கும் சிந்தனைதான் அதிகமாயிற்று .........

வேதாந்தங்கள் சொல்லுவதுஎல்லாம்
வேடிக்கை ஆயிற்று
வேதாளங்கள் சொல்லுவதெல்லாம்
கூற்றுகள் ஆயிற்று ..........

மனித நேயம் மறந்தவர்க்கு
மத நியாயம் பெரிதாக
கற்சிலைகள் குடியிருக்க
கலவரங்கள் அன்றாடம் ..............

கொட்டும் மழையும் குடிக்கும் நீரையும்
பொதுவாய் பகிர்பவனுக்கு
பொறுமையை பகிர
மனமில்லாமல் போய்விட்டது ..............

மலர்களால் நிறப்பவேண்டிய மனித பூமியை
மரணங்களால் நிரப்புகிறான்
பறவைகள் பாடும் கீதங்களுக்கு பதில்
பாமரர்களின் அழுகுரல்தான் அதிகமாய் ...........

மனித நியாயங்களைத்தான்
மத நியாயங்கள் போதிக்கின்ற
மனிதனோ மரண நியாயங்களைத்தான்
போதிக்கிறான் ...........

விளக்கின் ஒளிதேடி மடியும்
விட்டில் பூச்சிகளாய்
விளைவுகள் தெரியாமல் விடைதெரியாமல்
இன்றுவரை மனிதன் ............

விடுதலை கிடைத்தும் கடைசிவரை
விபரீத சிறைக்குள்
காலம் மாறுமா ?
நம் கவலைகள் தீருமா ?

எழுதியவர் : வினாயகமுருகன் (17-Oct-14, 8:20 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : viduthalai kural
பார்வை : 91

மேலே