விதம்

பறவைகள் பலவிதம்
பறக்கும் விதம் ஒரே விதம்

மனிதர்கள் ஒரே விதம்
வாழ்வது பலவிதம்

திட்டங்கள் பலவிதம்
சட்டங்கள் ஒரே விதம்

கவலைகள் பலவிதம்
உள்ளங்கள் ஒரே விதம்

வேதங்கள் பலவிதம்
கடவுள் ஒரே விதம்

எழுதியவர் : பாத்திமா மலர் (17-Oct-14, 12:05 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : vitham
பார்வை : 80

மேலே