கண்ணீர் சிந்தேன்

உனக்காக நான் வாங்கிய அனைத்தும்
என்னிடமே இருக்கிறது !

எனக்காக ஒற்றைத் துளிகூடவா இல்லை
உன் விழிகளில் !

கனக்கிறதாம் என் பிணம் மனம் முழுக்க நீ
தந்த வலி நிறைந்திருப்பதால் !

சற்று கணம் குறையட்டுமே என் வலிகளை
கரைப்பதற்காகவாவது கண்ணீர் சிந்திவிடேன் !

எழுதியவர் : முகில் (17-Oct-14, 11:10 am)
பார்வை : 106

மேலே