மது அருந்தும் ஆசையில்
உன் கற்றை விழிப் பார்வையால்
எனைக் கட்டி வைத்தவளே !
ஒற்றை மொழி பேசடி
காற்றும் இசையாகும் !
திசையறியாப் பாதையில் பயணித்து
உன் விசையறிந்து வந்த என்னை !
மிரட்டுதடி உன் மௌனம் !
இதழ் விரிக்க மாட்டாயா !
மது அருந்தும் ஆசையில் நான் !
உன் இதழ் பார்க்கும் நேரத்தில் !