அவர்களுக்கு சொல்

பாறையான
என் மனதில்
உள்ளே ..
நீ!
தேரையாய்!

கல் இவன்
என்றார்கள் என்னை..!
என்னுள்..
நீ!
ஈரமாய்..!

சேறு இவன்
சொன்னார்கள்..என்னை !
என்னில் பூத்தாய் ..
நீ..!
செந்தாமரையாய்!

நீயே.. என்..
துன்பத்தை வென்ற எண்ணிலா இன்பம்..
இருளினை போக்கிய வெண்ணிலா என்றும் ..
சோகத்தை மாற்றிய ஆனந்த கீதம்..
உரைத்திடு ..உலகிற்கு
நம் காதல் சந்தம்..!

எழுதியவர் : karuna (17-Oct-14, 11:21 am)
பார்வை : 97

மேலே