காதல் எனபடுவது யாதெனில்

காதல் எனபடுவது யாதெனில்

அழகை தேடாமல்
காண்பதையே
அழகாக்கி கொள்வது

முகம் சுளித்தாலும்
முகவரி தேடும்
முரண்பாடு இல்லாமல்
முதல் கவிதை வந்து விழும்

அகத்திணை அறியாமல்
உயர்திணை பாராமல்
இதயத்தினை இடமாற்றும்

காதல் என்பது
பார்ப்பவை அனைத்தையும்
தலைகீழாய் காட்டும்
தலைகீழ் பறவை போன்றது

கூலான் கற்கள் நிறைத்த
நீரோடை போல
சலசலக்க வைக்கும்
ரத்த ஓட்டத்தை

பட்டம் போல
உயர பறந்தாலும்
பறவையின் சுதந்திரம்
இதற்க்கு இல்லை

வீடு வாசல் விட
வீதி மரம் சுகம் தரும்
மிதிவண்டி பயணம்
நடைவண்டி பயிலும் அவளோடு

கைகுட்டையில்
காதல் மணக்கும்
ஒரு குடையின் கீழ்
இரு தலை நனையும்

கால்கொலுசு
காதல் ஒலி எழுப்பும்
தலை வலி வந்தால் கூட
அவள் முத்தம் முதல் மருந்தாகும்

நாட்காட்டிக்கு
தனியே நகர்வது பிடிக்காது
பிசைந்த உணவை
நுகர்வது கூட பிடிக்காது

பசி மயக்கம் துறந்து
காதல் மயக்கம் வரும்
விழித்து பார்த்தால்
வீதியில் நிலவை தேடிகொண்டிருப்பாய்

எடை குறைந்த
இலவம் பஞ்சாய்
காற்றில் பரப்பாய்
இலவசமாய்
இன்ப சுற்றுலா போய் வருவாய்

கடிதங்கள் தூது போகும்
காத்திருப்பு காரணம் தேடும்
பூக்கள் வாடபோகும் நேரம்பார்த்து-அவள்
புன்னகை சம்மதம் சொல்லும்

வேலி தாண்டிய காதல்
பலியை சுமந்து வாழும்
காதலுக்கு வேலி போட்டால்
வலியோடு வாழ்க்கை தொடரும்...

எழுதியவர் : பாலமுதன் ஆ (17-Oct-14, 11:30 am)
பார்வை : 179

மேலே