தொலைகிறோம் தொலைக்கின்றோம்

மாறிவிட்டன விரைவுப்
பேருந்து வண்டிகளாக
நாமுமதான் நவீன உலகில்.....

நேரமில்லையென
வேலைச் சுமைககும்
குடும்ப சுமைக்கும்
பயந்து கொண்டு......

நாடியே கிடக்கின்றன
தெருத் தெருவாய்
திறந்து கிடக்கும்
பார்களைத் தேடி
போதை வண்டுகளெல்லாம்.....

மஞ்சள் முகம் மாறி
ஒப்பனையில் விதம் விதமாய்
அலங்காரமாய் ஜொலி ஜொலிக்கிறது
சில் வண்டுப் பூக்களாய் .....

கோவிலில் மட்டும்தான்
நெற்றியிலிடும் திலகம்
விதம் விதமாய் ....

கேட்பாரற்றுக் கிடக்கிறது
தெரு வாசல் அலங்கோலமாய்
மாக் கோலமின்றி
செயற்கையில் ஓவியமாய்...

கண்கள் பளபளக்க
சிமிட்டி அழைக்கிறது
மின்சார அடுப்புகளும்
மின்சார அம்மி ஆட்டுக் கல்லும் .....

புரட்டிபோட்டு விட்டது
கரங்களுக்கும் விரல்களுக்கும்
வேலையில்லை என்று
துணி துவைக்கும் எந்திரங்கள்
செய்யும் ஆச்சர்யங்கள் மாயங்கள்.....!

நேரங்கள்தான்
காத்துக் கிடக்கின்றன
கணினியிலும்
தொலைகாட்சியிலும்
நகை ஜவுளிக் கடைகளிலும்.....

கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன
அன்றைய அம்மியும் ஆட்டுக் கல்லும்
அவைகளும் ஏங்குகின்றன
முதியோர் இல்லத்திற்கே
சென்றுவிடலாமென ...... !!

சேமித்தோம் நேரங்களை
இன்று தொலைகின்றோம்
நம்மையும் சேர்த்தே
மருத்துவரிடம் தினம் தினம்
போராடுகிறோம்
புதுப் புது நோய்களோடு .....!!!



அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : தயா (18-Oct-14, 10:17 pm)
பார்வை : 97

மேலே