தீபாவளி தீபங்களின் வரிசை

தீபாவளி நல் வாழ்த்துக்கள் எழுத்துவுக்கும் எழுத்து தள நண்பர்கள் அனைவருக்கும்
(தீபம் +ஆவளி) தீபங்களின் வரிசை
தினம் தினம் வாழ்த்திடு
தீபங்கள் பேசும்
கண்களின் வழியே......
உன் விரல் பற்றியதில்
தீபக் கண்கள் அணைக்கும்
விழிகளின் வழியே....
நிற்கின்றன
தீப வரிசைப் பூக்கள்
வரங்கள் கேட்டு ....
காக்கின்றன
வண்டுகளின் ரசனை
ஸ்வரங்கள் மீட்டு... ....
மொத்தமாய் முத்த
முத்தாய்ப்பில் கன்னமுகம்
மாத்தாப்புச் சிரிப்பில்.....
வான் சீற்றத்தில்
நிலாவில் நடுக்கம்
உன்முத்துச் சிரிப்பழகில்......
தேடித் தேடி தினமும்
உன்னையே சுற்றுகிறது சங்கு
உன் புன்னகை கேட்டு.....
தீபத் திருநாளில்
தீபங்கள் ஒளிமூச்சில் மயக்கம்
நீ தேவதையென.....