எப்படி நடக்கும் அது

சுற்றிலும் இருள்
சூழ்ந்திருக்கும் ..
தூரத்தில் ஒளி
வரவேற்க காத்திருக்கும்!

நட்டாற்றில் விட்டது
போலிருக்கும்..
கட்டை ஒன்று
மிதந்து வந்து..
கரை சேர்க்கும்.!

செய்வதறியாது மனம்
துடிக்கும்..
உற்ற தெய்வம்
வேற்றுருவில் வந்து
கை கொடுக்கும்..

அடுத்த அடி
எடுத்து வைக்கும் முன்னாலே
அத்தனை அச்சங்களும் வந்து விடும்..
எத்தனைதான் சோதனைகள் எதிர்ப்பட்டாலும்
தாயினும் மேலானவனின்
துணை இருக்கும்..!

பயணத்தை தொடர்ந்திடு..
விழும் அடிகளை எண்ணாது..
நம்பிக்கை வைத்து
ஒவ்வொரு அடியாக
முன்னேறு..!

எழுதியவர் : karuna (24-Oct-14, 12:54 pm)
பார்வை : 152

மேலே