சாதுர்யமாய் ஹைபுன்

*
அவன் தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்களை நிறையப் படிப்பது வழக்கம். பலரும் அவனை புத்தகப்புழு என்று கேலி பேசினாலும், “ ஏதோ பைய விஷயம் கொஞ்சம் தெரிஞ்சி வைச்சிருக்கான்னு ” - அறிந்தவர்கள் பாராட்டுவார்கள். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் அவனிடம் வந்து, ஆலோசனைக் கேட்பார்கள். அவனும் உடனடியாக அதற்கான தீர்வு சொல்லி அனுப்பி வைப்பான். இதனால், அவனுக்கு நிறைய பேர் “ பட்டப்பெயர் “ வேறு வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.
இவ்வளவு அறிவா இருக்கே…
பொழப்புக்கு வழி தேடலையா?
பெரியவரின் பாராட்டுக் கேள்வி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (25-Oct-14, 8:48 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 157

மேலே