முதல் காதலில்
நான் உருகுவேன் என நீயும்
நீ மாறுவாய் என நானும்
புரிந்துகொண்ட காதலில்
கடைசிவரை புரியாமல் போகிறது
உன் மௌனம் .......
காதல் அனாதைதான்
ததேடுக்கிறோம் விழிகளால்
அன்றுமுதல் ஆரோக்கியமாக
வளர்கிறது கற்பனை குழந்தையாய்
காதல் உன்னிலும் என்னிலும்
இருவருக்குமான காதலில்
யார் முதலில் அவரவர் வீட்டில்
சொல்வது என்பதில்
வருகிறது நம் காதலுக்கான
முதல் பிரிவு ....
நாம் இருவரும் சொல்லாமலே
நம் வீட்டிற்க்கு தகவல் சேரும்
அரசல் புரசலாய்...
நமக்கான காதல்
அங்ககரிக்க முடியாமல்
போனாலும் அர்த்தம் மாறாது
காதலுக்கு எப்போதும்
என் தாய் சம்மதம் தருவாள்
என நான் கணித கணிப்பு
திரையில் காண்கையில்
கண்ணீர்விட்டு ஐயோ பாவம்
சேர்த்து வைக்கலாம்ல
என அங்கலாய்த்து புலம்பினாள்
நம் காதலுக்கும் அவாறு செய்வாள்
என நம்பி குதித்தேன்
காதலில் விழுந்தது நான் மட்டுமல்ல
என் கணிப்பும்தான் ....
ஜாதி மட்டுமல்ல எதிரி
காதலை பொறுத்தவரை
புரிதலும்தான் அந்த
புரிதல் தவறுவது தொடங்கவதும்
நம்மிலிருந்துதான்...
அது புரிந்தால்
வாழும் எண்ணற்ற காதல்