காதல் இனி வரும் காலங்களில்
தோற்ற காதல் கதைகளில்
தோற்றதற்கான காரணம்
சொல்லப்பட்டதே இல்லை
இனிவரும் காதல் தோற்காமல் இருக்க
இருந்தும் விதவிதமாய்
பாட்டி கதைகளாய்
நம்மை சுற்றி என்றும்
எண்ணற்ற காதல் ...
பிரிவு காதலில் வலிக்கும்
என உணர்ந்த கதைகளில் கூட
நாம் பிரிததில்லை ....
ஏன் முடிவை படித்ததில்லை
காதல் அத்தனை கணமா
இரு மனம் நேசிக்க
சம்மதம் யாசிக்க
மறுத்திடும் மனதிலும்
நேசம் இருந்தால்
தாஜ்மஹால் வேண்டாமே
சமாதி எப்படி காதல் சின்னமாகும்
வாழ்ந்தவரின் ஒரு புகை படம்
ஆக்குங்கள் காதல் சின்னமாய்
அப்போதாவது தோற்காமல்
இருக்கட்டும் இனிவரும் காதல்
இனிவரும் காலங்களில் .......