காதல் தேர்வு
மலரே காதல் தேர்வுகளில்
நீ தேனீக்களை கவனிக்கின்றாய்
தென்றலையும் கவனிக்கின்றாய்
ஆனால் முட்களை மறந்துவிடுகிறாய்
தேனீக்கள் தேன் உள்ளவரை
சுற்றி வரும்
தென்றலோ தீண்டிய உடன்
விட்டு விடும்
ஆனால் முட்களோ நீ
வாழும் வரை காவல் தரும்
தோற்றங்களை கண்டு
ஏமாறாதே மலரே
வாழ்க்கை தேற்றங்களை
கண்டு நீ சேரு மலரே