பெண்கள் சுதந்திரம்

ஆண்டாண்டு காலமாய்
ஆண்கள்ஆதிக்கத்தில்
பெண்கள் அடங்கி
ஆணவ ஆண்களை
அம்சமாய் கையாண்டு
அழகான குடும்பத்தை
அமைதியாய் உருவாக்கும்

அன்பான பெண்களுக்கு

கருத்து சுதந்திரம்
கருவிலிருந்து
கல்லறை வரை இல்லை ==

ஆன் பெண் சுதந்திரம்
சம விகிதம் ===

குடும்ப சுமைகள்
இருவரின் சுமைகள் ==

கருத்து சுதந்திரம்
ஜனநாயகம் ==

ஆயினும் ....

மராத்தான்
ஓட்டத்தில்

பெண்கள்
விசில் ஊதிய முதல்
கையிற்றை தொடும் வரை
ஓடி வெற்றி கொண்ட போதிலும்

ஓய்வு காலத்திலும்
மாரத்தான் ஓட்டத்தை
தொடர வேண்டிய சூழ்நிலை ==

பெண்கள் விரும்பிய வகையில்
வாழ்க்கையை
வாழ முடியாமல்
குடும்ப சுமைகளிலும்
பொறுப்புகளிலும்
கையிற்றால் கட்டப்பட்டு
ஆயுள் முழுவதும்
சுதந்திரம் இல்லா
அடிமை வாழ்க்கையை தான்
அடி த் தளமாய் ஏற்கின்றனர்.====

இந்த நிலை மாற ஆண்கள் முன் வர வேண்டும் ====

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவிற்கு மாறுபட்ட கருத்து இருக்கும் . இருந்தாலும் பெண்கள்
முழுமையாய் அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட முடியவில்லை என்பது
ஒருமித்த கருத்து பதிவு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கிருபகணேஷ்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (26-Oct-14, 3:36 pm)
Tanglish : pengal suthanthiram
பார்வை : 510

மேலே