மனம் முறியாதே

மரம் ஒதுக்கினாலும்
உன்னை மழை ஒதுக்கவில்லை
இலையே நின் கடன்
இன்னும் உண்டு
தத்தளிக்கும் எறும்புகளுக்கு
கப்பல்லல்லவா நீ

முதுமை எண்ணி உன்னை
மரம் உதிர்த்தாலும்
மனம் முறியாதே
உன் கடன் எங்கேனும் உண்டு

எழுதியவர் : கவியரசன் (26-Oct-14, 7:43 pm)
பார்வை : 91

மேலே