வெறுப்பு
உன்னை நான் வெறுகின்றேன்
காரணம் நீ என்னை நேசித்தாய்.
நான் உன்னை வெறுக்கிறேன்
காரணம் உலகத்தில் உள்ள
அனைவரை விடவும் ஏன் என் மீது
பாசம் வைத்தாய் .
நான் உன்னை வெறுக்கிறேன்
காரணம் இந்த பாசத்தை எல்லாம்
எனக்கு கடைசி வரை தரமால்
ஏன் பாதியிலேயே சென்றாய் .
என்னை மட்டும் இந்த பைத்தியங்கள்
வாழும் உலகத்தில் தனியாக விட்டுவிட்டு.
இப்படிக்கு என்றும் அன்புடன் உன் அன்பு தங்கை புவனா .

