வேலியே பயிரை மேய்ந்தால்

வேலியே பயிரை மேய்ந்தால்
விளைநிலம் என்னாகும்?

வேளாண்மை செய்பவன்
மேலிடத்தில் முறையிட்டாலும்
வேலியில் குடியிருக்கும்
ஓணான்களும் பச்சோந்திகளும்
நியாயத்தின் பார்வையைத்
திரையிட்டு மறைப்பதால்

மெலிடம் கீழிடமாகி
அந்தகன் வேடமிட்டு
நடத்திடும் நாடகத்தில்
வெற்றிவாகை வேலிக்கே!

முறையிட்ட பலிகிடாவோ
ஓணான்களுக்கும் பச்சோந்திகளுக்கும்
ஏளனப் பொருளாய்ப் போகும்

சாகாவரம் பெற்ற
தீமைகளை
எதிர்க்கும் சக்திகளுக்கு
என்றென்றும் தோல்வியே!

எமனுக்கு சாவுமணி
சிவன் கையில் கிடையாது.

உலகமே நாடக மேடை
பார்த்து இரசிப்பதுவே
நமக்கிட்ட பணியாகும்.

எழுதியவர் : மலர் (28-Oct-14, 10:46 am)
பார்வை : 261

மேலே