புவனாசக்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : புவனாசக்தி |
இடம் | : |
பிறந்த தேதி | : 30-Sep-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 321 |
புள்ளி | : 82 |
என்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை.
நீலா சாரலி ( பாகம் 1)
*******************************
வாழ்க்கை..! எதுவுமே இல்லாதப்போது, எதற்கோ வாழ வைக்கும். எல்லாம் இருக்கும் போது, எதற்கும் வாழ வைக்கும். சிலருக்கு எதற்கும் வாழ விருப்பம் தராது. எல்லாம் அவரவர் மனநிலைப்படி, ஆசை நிலவரப்படி நியதிகள் மாறும். உருமாறும்.
எல்லாம் மாயை..! எதுவுமே மாயை..! அன்பு என்பதும் கூட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு காட்டப்படும் மாயைதான்.. ஒருவரின் அன்பு என்பது நம்மிடமிருந்து பிரியக்கூடிய நேரத்தில் அது நமக்கு கொடுமையின் உச்சமாக காட்டப்படும் உணர்ச்சிப் பிழையே அன்றி, அது ஒரு மாயை எனும் தெளிவு நமக்கு புரிவதில்லை., புலப்படுவதில்லை. காரணம் அன்பு அரவணைக்கும்
சென்னை-ஆவடி இரயில்நிலையம்.
ஓர் இளம்பெண், நவநாகரீக தோற்றம்,சேலையுடுத்திய உயிருள்ள சிலையழகு. பொதுவாகவே பெண்களுக்கு விழிகள் அழகு. இளம்பெண் இவளுக்கோ விழிகள் சிப்பி வடிவ அழகு. முழிகள் சிப்பிக்குள்ளிருக்கும் வசீகர.. வெள்ளிமணி முத்தழகு.
என் முன் சென்ற அந்த விழியழகு தேவதையை
"எக்ஸ்கியூஸ் மீ மேடம் " என்று கவனத்தை ஈர்த்தேன்.
அவள் அவளின் பதுமையழகு வட்ட முகத்தை திருப்பி " சொல்லுங்க" என்றாள்.
ஒரு நொடியில் அவள் விழியழகில் ரசனையோடு செத்துபிழைத்து " இந்த புக் உங்க பேக்ல இருந்து கீழே விழிந்திடுச்சி இந்தாங்க "
தவறிவிட்ட அந்த புத்தகத்தை வாங்கியவாறே தவறாமல்
" மிக்க நன்றிங்க தோழா" என்று சொல்லி
திவ்யாவும், அஜினும் நெருங்கிய நண்பர்கள்.இருகுடும்பங்களும் வசதி படைத்தவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் படித்துக்கொண்டிருக்கின்றனர். பன்னிரெண்டாம் வகுப்புவரை ஒரே பள்ளி ஒரே டியூசன் பக்கத்து பக்கத்துவீடு.... எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள் இவளுக்கு என்ன உதவி என்றாலும் அவன் செய்து கொடுப்பது வழக்கம் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டதும் இவர்கள் பெற்றோரும் இவர்கள் விருப்பப்படி ஒரே கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளியில் படிக்கும் போதே இருவரும் ஒரே பைக்கில் செல்வது வழக்கம் இப்பொழுதும் கல்லூரிக்கும் இதேநிலைதான்.
படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி இருவரும் ஒன்றாகவே இருந்து வந
புவனா மிகவும் மென்மையானவள். செடியில் இருக்கும் மலரை பறிக்கும் போது கூட செடிக்கும் வலிக்காமல், பூவிற்கும் வலிக்காமல் பறிப்பவள்..
அன்று ஞாயிற்றுக்கிழமை.
ஞாயிறு என்றாலே ஒரு வித சோம்பல் பற்றிக்கொள்ளும் கொஞ்சம் லேட்டாக எழுந்திருக்கலாம் என்று, ஆனால் புவனா அன்றுதான் சுறுசுறுப்பாய் அதிகாலையிலேயே எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் வெண்ணிலவையும், பின்பு எழும் அதிகாலை சூரியனையும் அப்படியே ரசித்துக்கொண்டு நிற்பாள்...
மழை விட்டபின் இருக்கும் வானம் போன்றது இவளது மனம். தன் மொட்டை மாடியில் வைத்திருக்கும் செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டே பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும்… கீழே இ
குருதி மொட்டொன்று விரிந்து
பூமியைப் பார்க்க ஆவலாய் எட்டிப் பார்த்தது
மண்ணுக்கும் பொன்னுக்கும் போட்டியிட்டு
சாதிப் பெயரால் சகதியில் சண்டையிட்டு
கருங்குரங்குகளாய் முகங்கள் மாற
முள்ளில் பட்ட சேலைப் போல்
கிழிந்த மனங்களும்
தீயிட்டு கருகிய உடல்களும்
எதற்கு சண்டை போடுகின்றனர்
என்று தெரியாமல் அழுகின்ற குழந்தை முகமும் .
அங்கங்கே சாதிப் பெயர்
கொண்ட பலகைகளும்.
சுட்டெரிக்கும் வாசகங்களும்.
பெண் என்றும் பாராமல்
குழந்தை என்றும் இரக்கம் காட்டாமல்
அடி உதைகளும்.
ஓசையற்ற செருப்படி சத்தங்களும்
வெள்ளமாய் பெருக்கெடுத்த உதிரமும்
என் சாதியா! உன் சாதியா! என்ற பேச்சுக்களும
அண்டைய மொழி மோகம் கொண்டு
தாய் மொழியை மறந்து திரியும் காக்கைகளே!
அடிமைப் பட்டு விடுதலைப் பெற்றோம்!
அண்டைய மொழிக்கு அடிமையாய் இருக்கிறோம் இன்றும்.
பிறந்தது தமிழ் நாடு! போவது வெளிநாடு!
வீடு மறந்து நாடு மறந்து உழைக்கிறாய்
நீ அண்டைய நாட்டு வளர்ச்சிக்காக!
தமிழுக்கும் தமிழுக்கும் மதிப்பில்லை தமிழ்நாட்டிலேயே!
ஆதியிலேயே வந்த எந்தமிழ் மொழியை.
பாதியில் வந்த அண்டைய மொழி ஆளுவதா!
பெற்ற அன்னையை மறந்தாயோ!
நீ பகட்டுக்கு ஆசை பட்டாயோ!
தமிழனுக்கோர் பெயருண்டு.
தமிழ் மொழிக்கோர் சிறப்புண்டு.
அது தமிழனுக்கே தெரியவில்லை
என்று எனக்கோர் வெறுப்புண்டு.
இனிக்கும் தேன் கசந்ததோ !
உன் நாவில் அண்டைய
அந்த பெண் சாரி சார் என்று சொல்லி விட்டு வேகமாக சென்றுவிட ஏதும் நடக்காதது போல் மௌனமாக அர்ஜுன் காரில் ஏறி அலுவலகம் சென்றுவிட்டான். அவனால் எந்தவேலையும் சரியாக செய்ய முடியவில்லை .சௌமிய சொன்ன வார்த்தைகள் மட்டும் தான் அவன் செவிகளில் ஒளித்துக் கொண்டிருந்தது.
வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட தயாரானான் அப்போது அவனது செல் சிணுங்க ஹலோ சொல்லு வருண் என்றான் (இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள்) எதிர்முனையில் வருண் பேசினான் அர்ஜுன் நான் ஒரு முக்கியமான வேலைய ஒரு இடத்துக்கு போயிட்டு இருக்கேன் நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்றான் வருண் ,அதற்கு அர்ஜுன் சொல்லுடா என்றான் ,என்னோட போட்டோ
பெற்றவர்களை அனுசரிக்காமல்
வாரி எறிந்து விட்டார்கள்
தெய்வங்களை தெரு முனைகளில் ~!
தருமம் ஓங்கி வளர்ந்த
புதல்வர்கள் ரூபம் எடுத்து
தாயவளை தவிக்கவிடும்
பிள்ளைகள் தான் இன்று ஏராளம் ~!
அற்பத்தனம் சொத்துக்கு
ஆசைப்பட்டு சொந்தங்களை
வீசி எறியும் செல்வங்கள்
செல்வந்தர் என தமை நினைத்து
செருக்கில் வாழுகிறார்கள்
செய்வதென்ன என்பதை அறியாமலே ~!
அகம்பாவம் கொண்டு
ஆதரவில்லாமல் அறுத்து எறிகிறார்கள்
உறவு முறை மறந்து ~!
வீதியில் வீற்றிருக்கும்
தெய்வங்கள் முன்னே
அடையாளம் தெரியாதது போல -உன்
அடையாளத்தைக் காட்டிக் கொடுக்காதே -உன்னை
பெற்றவர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல -
முட்டாள் பிள
குப்பை மேட்டிலே ...............,
கற்பின் "குறி" சிதைக்கப்பட்டு
ஆடைகள் கிழிக்கப்பட்டு
உடல் வெளிறி கிடக்கிறாள்
ஒருத்தி ............,
இறந்த பின்னும்
விடுவதாய் இல்லை
செத்துக்கிடக்கும்
புறாவை
வெறிபிடித்த காக்கைகள்
அவளின் விரல் கணுக்களில்
இன்னும் ஆயரம் ஆயரம்
பெண்கள்
என் கனவு உலகம் என்னை தேடி தவிக்கிறது
நான் செல்கிறேன் .
என்னை நேசிக்கும் உலகத்தை
நான் மீண்டும் நேசிக்க .
உயிர் உள்ள உறவுகள்
காயப்படுத்துகிறது என்னை .
உயிரற்ற என் கனவு உலகத்தில்
வாழ போகிறேன் நான் உயிருடன்.
அங்கு யாரும் இல்லை
என்னை வெறுப்பதற்கும் காயப்படுத்துவதற்கும்
நானும் என் கனவும் தவிர.
இன்று முதல்
என் வாழ்கை தொடங்குகிறது என் உலகத்தில்