பெற்றவர்கள் பிள்ளைகளிடம் இருந்து நிறைய பெற்றவர்கள்தான்
பெற்றவர்களை அனுசரிக்காமல்
வாரி எறிந்து விட்டார்கள்
தெய்வங்களை தெரு முனைகளில் ~!
தருமம் ஓங்கி வளர்ந்த
புதல்வர்கள் ரூபம் எடுத்து
தாயவளை தவிக்கவிடும்
பிள்ளைகள் தான் இன்று ஏராளம் ~!
அற்பத்தனம் சொத்துக்கு
ஆசைப்பட்டு சொந்தங்களை
வீசி எறியும் செல்வங்கள்
செல்வந்தர் என தமை நினைத்து
செருக்கில் வாழுகிறார்கள்
செய்வதென்ன என்பதை அறியாமலே ~!
அகம்பாவம் கொண்டு
ஆதரவில்லாமல் அறுத்து எறிகிறார்கள்
உறவு முறை மறந்து ~!
வீதியில் வீற்றிருக்கும்
தெய்வங்கள் முன்னே
அடையாளம் தெரியாதது போல -உன்
அடையாளத்தைக் காட்டிக் கொடுக்காதே -உன்னை
பெற்றவர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல -
முட்டாள் பிள்ளைகளைப் பெற்ற மேதைகள் ~!
தாயன்னை ஊட்டிய
தாய்ப்பாலும் -உன்
உடம்பில் விசமாக
ஆட்கொண்டதோ -நீ
அவர்களை அஞ்சலி செய்யாமல்
அவதியாக எண்ணுகிறாயே ~!
பிள்ளைகளின் முன் அஞ்சி
வாழ்வதை விட -அவர்கள்
தமக்குத் நன்கொடையை தந்த
வீதி வாசலே சிங்காசனம்- என
நினைத்து வாழும் பெற்றோர்கள்
தெய்வங்களும் போற்றும் தெய்வம்தான் ~!
பெற்றவர்களுக்கு ஒன்றும்
உடல்நலக் குறைவும் இல்லை -
வீதிகளில் இருப்பதற்கு
பிள்ளைகளுக்குத்தான் மன நலக் குறைபாடு -இன்று
முதியோர் இல்லங்களை தேர்ந்து எடுப்பதற்கு ~!
தமக்கு இடையூறு என எண்ணி
ஆஸ்திகளை மட்டு தமக்கென
வைத்துக் கொண்டு
ஆகாசப்புரட்டனாக வாழுகின்ற பிள்ளைகள்
தெய்வங்களை பார்க்க முடியாது
வெளியிலே நிற்கும் செருப்புக்கள் தான் ~!
மூலவேரான பெற்றவர்கள் இல்லாமல்
தளைத்து விடுமா தளிர்கள் -
மடிந்து போய்விடும் மண்ணிலே
உதிர்ந்து போகாமல்இன்றும் உங்களை காக்கின்றனர் ~!
பேரொலி போடத் தேவையில்லை -நீங்கள்
அவர்களை தூக்கி எறிந்ததால்-
பெற்றவர்கள் இல்லாமல் அலையும்
பிள்ளைகள் தத்தெடுக்கும் தாய் தந்தையாக அவர்களை ~!
காலங்கள் மண்ணோடு போகாது -அது
உன்னுடனும் தொடர்ந்து வரும் -உன்
வாழ்வையும் கண்காணித்துக் கொண்டுதான்
இருக்கும் -உனக்கான
இன்றைய வரவேற்பு
நாளை உன் பெற்றோர் வழிதானோ
அதுவும் உன் கையில் இல்லை ~!